சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   94
Zoom In NormalZoom Out

407.மீனுடை விரிதிரை வையங் காக்கிய
மானுட வுடம்பினான் மறைந்து வந்தவத்
தேனுடை யலங்கலான் றெய்வ மார்பகம்
தானடைந் தமர்வதற் குரிய டையலே.,
 
408.ஆங்கவற் கீந்தபி னாழி தாங்கிய
ஈங்கவற் கொன்றுனக் கிரண்டு சேடியும்
தாங்கிய திருவினாற் றருமற் றென்றலும்
வீங்கிய வுவகையன் வேந்த னாயினான்.
 
409.கொங்கலர் தெரியலான் றிறத்திற் கொள்குறி
இங்கியா னிசைத்ததே யமையு மல்லதோர்
திங்கணா ளகவையிற் றிவிட்ட னாங்கொரு
சிங்கம்வாய் பிளந்திடுந் தெளியீ தென்னவே.
 
410.நிமித்திக னுரைத்தலு நிறைந்த சோதியான்
உமைத்தகை யிலாததோ ருவகை யாழ்ந்துகண்
இமைத்தில னெத்துணைப் பொழுது மீர்ம்மலர்ச்
சுமைத்தகை நெடுமுடி சுடரத் தூக்கினான்.
 
411.இருநிலத் தலைமக னியன்ற நூற்கடல்
திருநிதிச் செல்வனைச் செம்பொன் மாரியாச்
சொரிநிதிப் புனலுடைச் சோதி மாலையென்
றருநிதி வளங்கொணா டாள நல்