| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 98 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 427. | கற்றவர்
கற்றன கருதுங் கட்டுரைக் குற்றன வுற்றன வுரைக்கு மாற்றலான் மற்றவன் மருசியே யவனை நாம்விடச் சுற்றமுங் கருமமுஞ் சொல்ல வல்லனே. |
| 428. | காரியந்
துணிந்தவர் மொழியக் காவலன் மாரியந் தடக்கையான் வருக வென்றொரு சீரிய திருமுகஞ் சிறப்பொ டீந்தனன் ஆரியன் கழலடி யவனும் வாழ்த்தினான். |
| 429. | மன்னவன்
பணியொடு மருசி வானிடை மின்னவிர் முகிற்குழா முழங்கும் வீதிபோய்த் துன்னினன் சுரமைநாட் டகணி சூடிய பொன்னகர்ப் புறதத்தோர் பொழிலி னெல்லையே. |
| 430. | புதுமலர்ப்
புட்பமா கரண்ட மென்னுமப் பொதுமலர்ப் பூம்பொழில் புகலும் பொம்மென மதுமலர் பொழிதர மழலை வண்டினம் கதுமல ரிணையொடு கலவி யார்த்தவே. |
| ஐந்தாவது மந்திரமாலைச் சருக்கம் முற்றும் | |