| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 99 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 6.தூதுவிடு
சருக்கம்
மருசி தங்கிய சோலையின்
இயல்பு | |
| 431. | மருவினியன
மதுவிரிவன மலரணிவன வகுளம் திருமருவிய செழுநிழலன செங்குழையன தேமா வரிமருவிய மதுகரமுண மணம்விரிவன நாகம் பொரிவிரிவன புதுமலரன புன்குதிர்வன புறனே. |
| 432. | நிழனகுவன
நிமிர்தழையன நிறைகுளிர்வன சாந்தம் எழினகுவன விளமலரன வெழுசண்பக நிகரம் குழனகுவன மதுகரநிரை குடைவனபல குரவம் அழனகுவன வலர்நெரிதர வசைநிலையவ சோகம். |
| 433. | எழுதுருவின
வெழுதளிரன விணரணிவன விரதம் இழுதுருவின கொழுமலரிடை யெழில்பொலிவன மதுகம் கழுதுருவின கஞலிலையன கழிமடலின கைதை பொழுதுருவின வணிபொழிலின பொழிதளிரன புன்னை. |
| 434. | வளர்கொடியன
மணம்விரிவன மல்லிகையொடு மௌவல் நளிர்கொடியன நறுவிரையக நறுமலரன நறவம் குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி ஒளிர்கொடியன வுயர்திரளினொ டொழுகிணரன வோடை. |
| 435. | குடைய |