சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   104
Zoom In NormalZoom Out

அன்னமென வல்லவென வன்னணந டந்தார்.
 
450.நலங்கனி மடந்தையர் நடத்தொறு மிணர்ப்போ
தலங்கல ளகக்கொடி யயற்சுடர வோடி
விலங்குபுரு வக்கொடி முரிந்துவெரு வெய்த
மலங்கின விலங்கின மதர்த்தவவர் வாட்கண்.
 
451.அலத்தக மலைத்தன வடித்தல மரற்றும்
கலைத்தலை மலைத்துவிரி கின்றகடி யல்குல்
முலைத்தலை முகிழ்த்தொளி துளும்பியுள முத்தம்
மலைத்தலை மயிற்கண மருட்டுமவர் சாயல்.
 
452.கணங்கெழு கலாவமொளி காலுமக லல்குல்
சுணங்கெழு தடத்தொடு முலைச்சுமை யிடத்தாய்
வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற்
கிணங்குதுணை யாய்ஞிமிறி ரங்கின வெழுந்தே.
 
453.முலைத்தொழில் சிலைத்தொழிலி னாருயிர் முருக்கும்
நிலைத்தொழில வென்றுள நினைத்தொழுக வின்பக்
கலைத்தொழில்கள் காமனெய்கணைத்தொழில்க ளெல்லாம்
கொலைத்தொழில வாட்கண்ணி னகத்தனகள் கண்டீர்.
 
454.துடித்ததுவர் வாயொடு துளும்புநகை முத்தம்
பொடித்தவி