சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   107
Zoom In NormalZoom Out

களைப் படைத்தன னிதுவால்
பின்னை யாங்கவன் பிறவிக்கு முதல்கண்ட வகையே.
 
463.வாம மேகலை முதனின்று வயிற்றிடை வளர்ந்த
சாம லேகைகண் மயிர்நிரை யெனினல மீ்து
காம நீரெரி யகத்தது கனன்றெழ நிமிர்ந்த
தூம லேகைகள் பொடித்தன துணைமுலை யுறவே.
 
464.சனங்க டாஞ்சில தவங்களைத் தாங்குது மெனப்போய்
வனங்கள் காப்பவ ருளரென முனிவமற் றன்றேல்
தனங்க டாந்தவழ் சந்தனக் குழம்பிடை வளர்ந்த
கனங்கொள் வெம்முலை கறுப்பதென் காரணமுரையீர்.
 
465.தூம மென்புகை துழாவிவண் டிடையிடை துவைக்கும்
தாம வோதியர் தம்முகத் தனபிறர் மனத்த
காம நீள்சிலை கணையொடு குனிவகண் டாலும்
யாமெ மின்னுயி ருடையமென் றிருப்பதிங் கெவனோ.
 
466.என்று மைந்தர்க ளிடருற வெழுதிய கொடிபோற்
சென்று கற்பக வனமன செறிபொழி லடைந்தார்
இன்று காமுகர் படையினை யிடர்பட நடந்த
வென்றிகாமனுக் குரைத்துமென்