சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   109
Zoom In NormalZoom Out

மழ்வன வணிகிளர் நறுநீர்
தீட்டி னார்நறுஞ் சாந்தமுஞ் சிறிதுமெய் கமழச்
சூட்டி னார்சிலர் நறுமல ரறுசுவை யடிசில்
ஊட்டி னாரவ னமரரு ளொருவனொத் தொளிர்ந்தான்.
 
472.வயந்த முன்னிய திலகைகல் லியாணி கைவடிவார்
வியந்த சேனைபின் கமலமா லதையென இவர்கள்
இயங்கு பூங்கொடி யனையவ ரியல்புக ணினையா
வயங்கு தொல்புக ழம்பர சரன்மகிழ்ந் திருந்தான்.
 
473.ஆங்கெழிற்பொ லிந்தவன்னி ருந்தபின்ன லங்குதார்
வீங்கெழிற்பொ லிந்ததானை வேந்தனேவ வீவில்சீர்ப்
பூங்கழற்பொ லங்குழைத்தி விட்டவனோடு போர்க்கதம்
தாங்கெழிற்பெ ருங்கையானை சங்கவண்ண னேறினான்.
 
474.தம்பியோடு சங்கவண்ண னம்பொன்மாலை தாழ்முகப்
பைம்பொ னோடை வீழ்மணிப் பகட்டெருத்த மேறினான்
செம்பொன் மாமலைச்சிகைக் கருங்கொண்மூவி னோடெழூஉம்
வம்பவெண்ணி லாவிலங்கு திங்கள்போல மன்னினான்.
 
475.ஆர்த்தபல்லி யக்குழா மதிர்த்தகுஞ்ச ரக்குழாம்
தேர்த்தவீரர் தேர்க்கு