சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   110
Zoom In NormalZoom Out

ழாந் திசைத்தபல் சனக்குழாம்
போர்த்தசாம ரக்குழாம் புதைத்தவெண் கொடிக்குழாம்
வேர்த்தவேந்தர் பல்குழாம் விரைந்தகூந்தல் மாக்குழாம்.
 
476.பாடுவார் வணங்குவார் பலாண்டுகூறி வாழ்த்துவார்
ஆடுவாரோ டார்வமாந் தரன்னரின்ன ராயபின்
சூடுமாலை சோரவுந்தொ டாரமாலை வீழவும்
மாடவாயின் மேலெலா மடந்தைமார் மயங்கினார்.
 
477.கொண்டலார்த்த பொன்னெனிக் குழற்கொடிக் குழாமனார்
மண்டலந் நிறைந்த திங்கள் வட்டமொத்த வாண்முகம்
குண்டலங் கொழும்பொனோலை யென்றிரண்டு கொண்டணீஇ
வண்டலர்ந்து மாலைதாழ்ந்து மாடவாய் மறைந்தவே.
 
478.கூடுதும்பி யூடுதோய் குழற்றொகைத் துணர்துதைந்
தோடுமே லெருத்திடைக் குலைந்தகோதை யோடுலாய்
மாடவாயின் மாலைஞால மாடமேறு மாதரார்
ஆடுமஞ்ஞை கோடுகொள்வ தென்னலாவ தாயினார்.
 
479.தொண்டைவாய் மடந்தைமார்கள் சுடிகைவட்ட வாண்முகம்
கொண்டகோல நீரவாய கோடி