| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 111 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| மாட
மேலெலாம் வண்டு சூழ்ந்த பங்கய மலர்க்குழா மிணைப்படூஉக் கெண்டையோடு நின்றலர்ந்த கேழவாய்க் கிளர்ந்தவே. | |
| 480. | மாலைதாழு
மாடவாய் நிலத்தகத்து மங்கைமார் வேலவாநெ டுங்கணே விலங்கிநின் றிலங்கலால் சாலவாயி றாமெலாமொர் தாமரைத் தடத்திடை நீலமா மலர்க்குழா நிரந்தலர்ந்த நீரவே. |
| 481. | சுண்ணமாரி தூவுவார்
தொழுது சேர்ந்து தோழிமார் வண்ணவார் வளைதயங்கு முன்கைமேல் வணங்குவார் நண்ணிநா ணொழிந்துசென்று நம்பிமார்கண் முன்னரே கண்ணிதம்மி னென்றிரந்து கொண்டுமென்று கண்ணுவார். |
| 482. | பாடுவார்
முரன்றபண் மறந்தொர்வாறு பாடியும் ஆடுவார் மறந்தணிம யங்கியாமை யாடியும் சூடுவான் றொடுத்தகோதை சூழ்குழன் மறந்துகண் நாடிவாய் நிழற்கணிந்து நாணுவாரு மாயினார். |
| 483. | இட்டவில்
லிரட்டையு மிரண்டுகெண்டை போல்பவும் விட்டிலங்கு தொண்டையங் கனிப்பிழம்பொ டுள்விராய்ச் சுட்டிசூட்ட ணிந்துசூளி கைமணி சுடர்ந்துநீள் பட்டம்வேய்ந்த வட்டமல்ல தில்லைநல்ல பாங்கெலாம். |