| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 113 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| யு
மனங்களும் தங்குமார்பி னம்பிமார்க டானைசோலை சார்ந்ததே. | |
| 489. | மானளாய
நோக்கினார் மனங்கலந்து பின்செல வானளாய சோலைவாயின் மன்னவீரர் துன்னலும் கானளாய போதணிந்து காவிவிம்மு கள்ளளைஇத் தேனளாவு வண்டுகொண்டு தென்றல்சென் றெழுந்ததே. |
| 490. | செம்முகப்
பசும்பொனோடை வெண்மருப்பி ணைக்கரும் வெம்முகத்து வீழ்கடாத்து வேழநின் றிழிந்தபின் கைம்முகத்து வேலிலங்கு காமர்தாங்கொ லென்றுசென் றம்முகத்த தும்பிவண்டு தேனொடாடி யார்த்தவே. |
| 491. | தாதுநின்ற
தேறனீர் தளித்திவற்றின் மேலளி கோதுநின்ற போதுகொண்டு சிந்திநம்பி மார்களை மாதுநின்ற மாதவிக் கொடிகடந் தளிர்க்கையால் போதுகென்றி டங்கள்காட்டு கின்றபோற் பொலிந்தவே. |
| 492. | போதுலாய
வேரிமாரி சாரலாய்ப் பொழிந்துதேன் கோதலா னெரிந்ததாது கால்குடைந்து கொண்டுறீஇ மாதுலாய வண்டிரைத்து மங்குல்கொண்டு கண்மறைத் தேதிலார்க்கி யங்கலாவ தன்றுசோலை வண்ணமே. |
| 493. | போதுலாய
பூம்பொதும்பர் மேலதென்றல் வீசலால் தாதுலாய போதணிந்து தாழ்ந்துதாம வார்குழல் மாதரார்கள் போலவல்லி மார்புபுல்லி மைந்தரைக் காதலால் வளைப்பபோன்று காவினுட் கலந்தவே. |
| 494. | புல்லிவண்
டமர்ந்துதங்கு பூந்தழைப் பொதும்பிடை மல்லிகைக் கொடிக்கலந்து மௌவல்சூட வௌவுநீர் |