சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   114
Zoom In NormalZoom Out

வல்லிமண்ட பங்கள்சென்று மாதவிக் கொழுந்தணி
அல்லிமண்ட பத்தய லசோகமாங்க ணெய்தினார்.
 
495.பஞ்சிலங்கு மல்குலார் பலாண்டுகூற வாண்டுபோய்
மஞ்சிலங் கசோகநீழன் மன்னவீரர் துன்னலும்
விஞ்சையன் மகிழ்ந்தெழுந்து வென்றிவீரர் தங்களுக்
கஞ்சலித்த டங்கைகூப்பி யார்வமிக் கிறைஞ்சினான்.
 
496.ஆங்கவ னிறைஞ்சலு மலர்ந்ததிங்க ணீளொளிப்
பூங்கழற் பொலங்குழைப் பொலிந்திலங்கு தாரினான்
நீங்கருங்கு ணத்தினீவிர் நீடுகுரவ ராதலில்
ஈங்கெமக்கு நீர்பணிந்த தென்னையென்றி யம்பினான்.
 
497.பானிறக் கதிர்நகை பரந்தசோதி யானையும்
நீனிறக் கருங்கட னிகர்க்குமேனி யானையும்
வானெறிக்கண் வந்தவன் மகிழ்ந்துகண் மலர்ந்துதன்
நூனெறிக்கண் மிக்கநீர்மை யொக்கநின்று நோக்கினான்.
 
498.வேல்கொடானை வீரர்தம்மை விஞ்சையன் வியந்துநீள்
நூல்கொள்சிந்தை கண்கடாவ நோக்கிநோக்கி யார்கலன்
கால்கள்கொண்டு கண்