சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   117
Zoom In NormalZoom Out

கடை குறுகச் சென்றார்.
 
508.மற்றவ ரடைந்த போழ்தின் வாயிலோ ருணர்த்தக்கேட்டுக்
கொற்றவ னருவி தூங்குங் குளிர்மணிக் குன்றம் போல
முற்றிநின் றிலங்குஞ் செம்பொன் முடிமிசை முத்த மாலைக்
கற்றைகள் தவழச் சென்றோர் கனககூ டத்தி ருந்தான்.
 
509.மன்னவ குமர ரோடு விஞ்சையன் மகிழ்ந்து வையத்
தின்னருள் புரிந்த வேந்த னிறையறிந் தினிதி னெய்திக்
கன்னவில் தோளி னான்றன் கழலடி தொழுது நின்றான்
அன்னவர்க் கிருக்கைத் தான மரசனு மருளிச் செய்தான்.
 
510.வீரியக் குமர ரோடும் விஞ்சையஞ் செல்வ னோடும்
காரியக் கிழவர்சூழக் கவின்றுகண் குளிரத் தோன்றி
ஆரிய னலர்ந்த சோதி யருங்கலப் பீட நெற்றித்
தாரகை யணிந்து தோன்றுஞ் சந்திர சவிய னானான்.
 
511.அலகையில் தானை வேந்த னம்பர சரனை நோக்கி
உலகுப சார மாற்ற முரைத்தலுக் குரிய கூறி
விலகிய கதிர வாகி விளங்கொளிக் கடகக் கையான்
மலரகங் கழும மோந்து மனமகிழ்ந் திருந்த போழ்தின்.
 
512.விஞ்சைய னெழுந்து தங்கோன் வெள்ளிவே தண்ட நோக்கி
அஞ்சலித் தடக்கை கூப்பி யரக்கிலச் சினையின் வைத்த
எஞ்சலி லோலை காட்ட விறைமகன் குறிப்பு நோக்கி்
வஞ்ச