| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 119 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 517. | தீட்டருந்
திலகக் கண்ணிச் செறிகழ லரசர் கோமான் மீட்டுரை கொடாது சால விம்மலோ டிருப்ப நோக்கி வாட்டரும் பெருமை யெங்கோ னோலையை மதியா வாறென் றோட்டருங் கதத்த னாகிக் கேசர னுரைக்க லுற்றான். |
| 518. | முன்னமோர் கருமம்
வேண்டி மொழிபவேன் மனிதர் தம்மால் என்னவ ரேனுமாக விகழ்ந்திடப் படுப போலாம் அன்னதே யுலக வார்த்தை யாவதின் றறியும் வண்ணம் மின்னவின் றிலங்கும் வேலோய் நின்னுழை விளங்கிற் றன்றே. |
| 519. | பூவிரி யுருவக்
கண்ணிப் பொலங்குழை யிலங்கு சோதித் தேவரே யெனினுந் தோன்றச் சில்பகல் செல்ப வாயில் ஏவரே போல நோக்கி யிகழ்ந்துரைத் தெழுவ தன்றே மாவிரி தானை மன்னா மனிதர தியற்கை யென்றான். |
| 520. | வரைமலி
வயங்கு தோளாய் வியாதியான் மயங்கி னார்க்குச் சுரைமலி யமிழ்தத் தீம்பால் சுவைதெரி |