சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   125
Zoom In NormalZoom Out

ன் புலமை மிக்கான்.
 
539.அலகிலா ஞானத் தகத்தடங் கநுங்கி
உலகெலாம் நின்னு ளொளித்தாயு நீயே
ஒளித்தாயு நீயே யுயிர்க்கெலாங் கண்ணாய்
அளித்தாயுங் காத்தாயு நீயேவாழி யறவேந்தே.
 
540.அழனாறும் வெங்கதிரோ னாண வலராது
நிழனாறு மூர்த்தியாய் நின்றாயு நீயே
நின்றாயு நீயே நிறைபொரு ளெல்லைக்கட்
சென்றாயும் வென்றாயு நீயேவாழி திருமாலே.
 
541.நிறைதரு கேவலத்தோய் நின்னடியார்க் கெல்லாங்
குறைதலி லின்பங் கொடுப்பாயு நீயே
கொடுப்பாயு நீயேயெங் குற்றேவல் வேண்டாய்
விடுத்தாயு நீத்தாயு நீயேவென்ற பெருமானே.
 
542.என்றவன் பாடக் கேட்டே யிறைஞ்சின குறிஞ்சி யேகா
நின்றன விலங்கு சாதி நிலங்கொண்ட பறவை யெல்லாம்
அன்றுமெய் மறந்து சோர்ந்தார் கின்னர ரமரர் தாழ்ந்தார்
வென்றவன் றியானத் துள்ளான் வியந்திலன் சிறிதும்
                                      வேந்தே.
 
543.மணநிரைத் திலங்குந் தாரோய் மற்றவ னுலோக நாதன்
குணநிரைத் திசைத்த கீதங் கேட்டலு மணிகொள் கோவைக்
கணநிரைத் திலங்குங் காய்பொன் முடிமிசை யீரைஞ் ஞூறு
பணநிரைத் திலங்கப் புக்கான் பணதர ரரச னன்றே.
 
544.பன்னக ருலகங் காக்கும் பாய்கதிர்ப் பசும்பொன் மேனி
மின்னவிர் வயிரச் சூட்டு விடுசுடர் மணிப்பொற் பூணான்
தன்னிக ரிகந்த தோன்றல் சரணெனப் பரமன் பாதம்
மன்னர்கட் கரசன்