சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   126
Zoom In NormalZoom Out

முன்னை வலங்கொண்டு வணக்கஞ் செய்தான்.
 
545.தேந்துண ரிலங்கு கண்ணித் தேவனத் தேவர் கோனைத்
தீந்தொடை நரம்பின் றெய்வச் செழுங்குரல் சிலம்ப வேத்தப்
பூந்துணர்க் கற்ப லோகம் புடைபெயர்ந் திட்ட போற்றா
வேந்துடை மான மெல்லாம் வேலினால் விடுத்த வேந்தே.
 
546.மாண்டதன்னிலைமை யுள்ளி வருபொருண் மெய்ம்மை 
                                      நோக்கித்
தூண்டிய சுடரி னின்ற தியானத்தைத் துளக்கு வாய்போல்
ஈண்டுவந் திசைக்குற் றேவ லெம்மிறை யடிக்கட் செய்தாய்
வேண்டுவ தெவன்கொ லென்றான் மிடைமணிப் பூணினானே.
 
547.பண்மிசை படர்ந்த சிந்தைப் பணதரற் பணிந்து மாற்றத்
துண்மிசைச் சுடர்பு நோக்கி யுறுபலி யதனைக் கேட்டே
விண்மிசை யவர்கள் போல வேண்டிய விளைக்குஞ் செல்வ
மண்மிசைப் பெறுவே னாக மற்றிதென் மனத்த தென்றான்.
 
548.இச்சையங் குரைப்பக் கேட்டே யிமையவ ரியற்கை யெய்தும்
விச்சையுந் துணையும் வெள்ளி விலங்கலுங் கொடுத்து
                                    வேந்தாய்
நிச்சமும் நிலாக வென்று நிறுவிப்போய் நில