| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 128 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ன்முறை
கொண்டு கண்டாய் கற்றவ ரின்று காறுங் காவனூல் கற்ப தெல்லாம். | |
| 553. | கொடிவரைந்
தெழுதப்பட்ட குங்குமக் குவவுத் தோளான் இடிமுர சதிருந் தானை யிறைத்தொழின் மகனுக் கீந்து கடிமண மனுக்குந் தெய்வக் கழலடி யரசர் தங்கள் முடிபொர முனிவிற் றான்போய் முனிவன முன்னி னானால். |
| 554. | விண்ணுயர் விளங்கு கோட்டு விடுசுடர் விளங்க
மாட்டாக கண்ணுயர் கதலி வேலிக் கார்க்கயி லாய நெற்றிப் புண்ணியக் கிழவன் போகிப் பொலங்கலம் புலம்ப நீக்கித் திண்ணிய தியானச் சோதிச் செஞ்சுடர் திகழ நின்றான். |
| 555. | கழலணிந்
திலங்கு பாதங் கலந்தன கருங்கட் புற்றத் தழலணிந் தெழுந்த வைவா யருமணி யாடு நாகம் பொழிலணிந் தெழுந்த வல்லி புதைந்தன பூமி நாதன் குழலணிந் தெழுந்த குஞ்சி குடைந்தன குருவிக் கூட்டம். |
| 556. | அருமுடி யரசர் தாழ்ந்த வடிமிசை யரவ
மூரக் கருவடி |