சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   131
Zoom In NormalZoom Out

566.ஆதிநூ லமைச்சர்க் கோதுமாண்பெலா மமைந்து நின்றான்
றூதனாச் செல்லிற் செல்லாச் சூழ்பொரு ளில்லை போலாம்
ஏதிலார்க் காவ துண்டோ வின்னன புகுந்த போதிற்
கோதிலாக் குணங்க டேற்றிக் கொழித்துரை கொளுத்த
                                      லென்றான்.
 
567.மற்றிம்மாண் புடைய நின்னை யுடையவம் மன்னர் மன்னன்
எற்றைநூற் றெய்த மாட்டா னிதன்றிற நிற்க வெம்மைச்
சுற்றமா நினைந்து நின்னைத் தூதனா விடுத்துச் செல்லப்
பெற்றியாம் பிறவி தன்னாற் பெறும்பயன் பெற்ற தென்றான்.
 
568.இன்றியா னின்னை முன்வைத் தினிச்சில வுரைக்கல்
                                        வேண்டா
ஒன்றியா னுரைக்கற் பால வுரையையு முணர்தி நீயே
வென்றியால் விளங்கு தானை விஞ்சையங் கிழவன் கண்ணா
நின்றியான் வாழ்வ தல்லா னினைப்பினி யில்லை கண்டாய்.
 
569.கொற்றவன் குறிப்பி தாயிற் கூவித்தன் னடியன் மாரை
உற்றதோர் சிறுகுற் றேவற் குரியராய்க் கருதித் தானே
அற்றமி லலங்கல் வேலோ னறிந்தருள் செய்வ தல்லான்