| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 134 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ங்கு தானையான் புகன்ற
மாற்றமும் தொங்கன் மார்பினாய் சொல்லு கேனெனா. | |
| 579. | அள்ளி
லைச்செழும் பலவி னார்சுளை முள்ளு டைக்கனி முறுகி விண்டெனக் கள்ளு றைத்தொறுங் கழுமி யூற்றறா வள்ளி லைப்பொழின் மகிழ்ந்து புக்கதும். |
| 580. | முள்ள ரைப்பசு முளரி
யந்தடத் துள்ளி ரைத்தெழு மொலிசெய் வண்டினம் கள்ளி ரைத்துகக் கண்டு வண்சிறைப் புள்ளி ரைப்பதோர் பொய்கை சார்ந்ததும். |
| 581. | நித்தி
லம்மணி நிரந்து வெள்ளிவேய் பத்தி சித்திரப் பலகை வேதிகை சித்தி ரங்களிற் செறிந்து காமனார் அத்தி ரம்மென அசோகங் கண்டதும். |
| 582. | தண்ணி
ழற்சுடர்த் தமனி யத்தினான் மண்ணி ழற்கொள மருங்கு சுற்றிய வெண்ணி ழற்சுடர் விளங்கு கற்றலங் கண்ணி ழற்கொளக் கண்ட காட்சியும். |
| 583. | சுரிந்த
குஞ்சியன் சுடரு மேனியன் எரிந்த பூணின னிலங்கு தாரினன் வரிந்த கச்சைய னொருவன் வந்துவண் டிரிந்து பாயவிங் கேறு கென்றதும். |
| 584. | மற்ற
வன்றனக் குரைத்த மாற்றமுங் கொற்ற வன்விடக் கொம்ப னார்சிலர் உற்ற மங்கலக் கலங்க ளோடுடன் முற்ற வூண்டொழின் முடிந்த பெற்றியும். |