| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 136 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| த
வண்ணமும் புரிந்து தொல்குலம் புகன்ற பெற்றியும் அருந்த கைத்தொடர் பமைந்த வாக்கமும். | |
| 590. | பின்னை
மன்னவன் பேணி நன்மொழி சொன்ன வண்ணமுஞ் சுற்ற மாயதும் பொன்ன கைக்குலம் பொலிந்து கண்கொள இன்ன கைச்சிறப் பருளி யீந்ததும். |
| 591. | அருங்க
லக்குழாத் தரசன் றேவிமார் பெருங்கு லத்தவர் பெயர்ந்து கண்டதும் ஒருங்கு மற்றுளோ ருரைத்த வார்த்தையும் சுருங்கில் கேள்வியான் றொழுது சொல்லினான். |
| 592. | சொன்ன
வார்த்தையிஃ திருக்கச் சொல்லுவ தின்ன மொன்றுள தடிகள் யான்பல மன்னர் தங்களை மகிழ்ந்து கண்டனன் அன்ன நீர்மையா ரரச ரில்லையே. |
| 593. | கற்ற
நூல்பிறர் கற்ற நூலெலா முற்ற நோக்கினு முற்ற நோக்கல உற்ற நூலெலா முற்ற நூல்களாப் பெற்ற நூலவன் பெற்றி வண்ணமே. |
| 594. | எரியு
மாணையாற் குளிரு மீகையாற் பெரியன் மாண்பினாற் சிறிய னன்பினால் அரியன் வேந்தர்கட் கெளியன் மாந்தர்கட் குரிய னோங்குதற் கோடை யானையான். |