| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 137 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 595. | எல்லை நீருல கினிது
கண்பட வெல்லும் வேலவன் விளங்கு தண்ணளி இல்லை யேலுல கில்லை யாமென நல்ல னேயவ னாம வேலினாய். |
| 596. | கற்ற
நூலினர் கலந்த காதலால் உற்ற போழ்துயிர் கொடுக்கு மாற்றலார் கொற்ற வேலவன் குடையி னீழலார் சுற்ற மாண்பிது சுடரும் வேலினாய். |
| 597. | கோதி
லாதவர் மக்கண் மக்கண்மற் றேதி லாரென வியைந்த தீமையில் ஆத லாற்றமர் பிறர்க ளாவதங் கோதி னாரவர்க் குள்ள தில்லையே. |
| 598. | வைய மின்புறின்
தானு மின்புறும் வெய்ய தொன்றுறிற் றானும் வெய்துறுஞ் செய்ய கோலினாய் செப்ப லாவதவன் றைய தாரினா னருளின் வண்ணமே, |
| 599. | வீவில்
வீங்குநீர் வேலி வாழ்பவர்க் காவி யாபவ ரரச ராதலாற் காவ லோவுங்கொல் லென்று கண்படான் மாவ றானையம் மன்னர் மன்னனே. |
| 600. | மங்குல்
மாமழை மாரி வண்கையான் பொங்கு காதலம் புதல்வர் தாமவர் இங்கண் வேந்தர்கட் கேனை மான்கண்முன் சிங்க வேறெனச் செப்பு நீரரே. |
| 601. | கைய
வாச்சிலைக் காம னிங்கிரு மெய்யி னால்வெளிப் பட்ட நீரதால் வைய மாள்பவன் புதல்வர் வார்கழல் ஐயன் மார்கடம் மழகி |