சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   140
Zoom In NormalZoom Out

கலந்துழித்
தாருங் கொங்கைக ளும்பொரத் தாஞ்சில
வாரம் பட்டணி வண்டின மார்த்தவே.
 
614.வண்டு தோய்மது வாக்கிவள் ளத்தினுட்
கொண்டு கொம்பனை யார்கள் கொடுப்பவஃ
துண்டு மற்றவ ரொண்டுவர் வாயொளித்
தொண்டை யங்கனி யின்சுவை யெய்தினான்.
 
615.தாம மென்குழ லார்தடங் கண்ணெனுந்
தேம யங்கிய செங்கழு நீரணி
காம மென்பதொர் கள்ளது வுண்டரோ
யாம மும்பக லும்மயர் வெய்தினான்.
 
616.சுற்று வார்குழ யார்தந் துகிற்றடம்
முற்று மூழ்கும் பொழுது முனிவவர்
உற்ற போழ்துணர்த் தும்பொழு தும்மலான்
மற்றொர் போழ்திலன் மன்னவ னாயினான்.
 
617.மண்க னிந்த முழவின் மடந்தையர்
கண்க னிந்திடு நாடகக் காட்சியும்
பண்க னிந்தவின் றீங்குரற் பாடலும்
விண்க னிந்திட வேவிழை வெய்தினான்.
 
618.வாவி யும்மது மண்டபச் சோலையுந்
தூவி