சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   141
Zoom In NormalZoom Out

 மஞ்ஞை துதைந்தசெய் குன்றமும்
பாவும் வெண்மண லும்புனற் பட்டமு
மேவு நீர்மைய னாய்விளை யாடினான்.
 
619.மின்னுஞ் செங்கதிர் மண்டிலம் வெய்தொளி
துன்னுந் திங்கட் பனிச்சுடர் தண்ணிது
என்னு மித்துணை யும்மறி யான்களித்
தன்ன னாயின னச்சுவ கண்டனே.
 
620.சீறிற் றேர்ந்துணர் வின்றிச் செகுத்திடு்
மாறுண் டென்பதொர் மாற்றம் பொறான்மனந்
தேறின் யாரையும் தேறுஞ் செருக்கொடிவ்
வாறு சென்றத வற்கர சென்பவே.
 
621.தோடு மல்கு சுரும்பணி கோதையார்
கோடி மென்றுகிற் குய்யத் தடம்படிந்
தாடித் தன்னணை யாமையிற் பூமகள்
ஊட லுற்றிடம் பார்த்துள ளாயினாள்.
 
622. ஆங்கொர் நாளிறை பெற்றறி வின்கடல்
தாங்கி னான்சத விந்துவென் பானுளன்
நீங்க லாப்புக ழான்றன் னிமித்திகன்
வீங்கு வெல்கழ லாற்கு விளம்பினான்.
 
623. மன்ன கேள்வளை மேய்திரை மண்டிலந்
தன்னை யாள்பவர்க் கோதின தங்கணே
பன்னி னாறு பகைக்குல மாமவை
முன்னம் வெல்