| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 144 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| வேந்தர்தம் தொகையை வென்றவென் றோளுள வாப்பிற பகையி னிப்படர்ந் தென்செயு மென்றனன் நகைகொ ணீண்முடி நச்சர வம்மனான். | |
| 635. | மாசி லாலவட் டத்தெழு மாருதம் வீச விண்டொடு மேருத் துளங்குமோ பேசின் மானிடப் பேதைக ளாற்றலால் ஆசி றோளிவை தாமசை வெய்துமோ. |
| 636. | வேழத் தின்மருப் புத்தடம் வீறுவ வாழைத் தண்டினு ளூன்ற மழுங்குமோ ஆழித் தானவர் தானையை யட்டவென் பாழித் தோள்மனித் தர்க்குப் பணியுமோ. |
| 637. | வேக மாருதம் வீசவிண் பாற்சிறு மேக சாலம் விரிந்தெதிர் செல்லுமோ ஏக மாயவென் சீற்றமஞ் சாதெதி ராக மானிடர் தாமசை கிற்பவோ. |
| 638. | குலிச மிந்திரன் கொண்டு பணிக்குமேல் மலையின் மாசிக ரங்களும் வீழ்த்திடும் நிலைய வெஞ்சுட ராழி நினைப்பனேற் றொலைவில் வானவர் தோளுந் துணிக்குமே. |
| 639. |
விச்சை மற்றவர் தம்மை விடுப்பதோர் இச்சை யென்கணுண் டாமெனின் யாவரே அச்ச மின்றிநிற் பாரந் நிமித்த நூல் பொச்ச லாங்கொல் புலந்தெழு நீர்மையாய். |
| 640. | புலவர் சொல்வழி போற்றில னென்பதோர் அலகில் |