சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   145
Zoom In NormalZoom Out

 புன்சொலுக் கஞ்சுவ னல்லதேல்
உலக மொப்ப வுடன்றெழு மாயினும்
மலைவன் மற்றதன் கண்மதிப் பில்லையே.
 
641. ஆத லாலதற் கேற்ற தமைச்சர்கள்
ஓதி யாங்குணர்ந் தீகவென் றொட்டினான்
யாதுந் தன்கணல் லார்செயற் கேன்றதோர்
ஏத முண்டெனு மெண்ணமில் லாதவன்.
 
642. அலங்க லாழியி னானது கூறலும்
கலங்கு நூற்கரு மத்தொழின் மாக்கடாம்
புலன்கொள் சூழ்ச்சிய ராகிப் புகன்றனர்
உலங்கொள் தோளவ னுக்குணர் வாயினார்.
 
643. எரியுந் தீத்திர ளெட்டுணை யாயினுங்
கரியச் சுட்டிடுங் காந்திக் கனலுமேற்
றெரியிற் றொல்பகை தான்சிறி தாயினும்
விரியப் பெற்றிடின் வென்றடு கிற்குமே.
 
644.முட்கொ ணச்சு மரமுளை யாகவே
உட்கி நீக்கி னுகிரினும் நீக்கலாம்
வட்கி நீண்டதற் பின்மழுத் தள்ளினும்
கட்கொ டாமன்ன யார்களை கிற்பவே.
 
645.சிறிய வென்றிக ழார்பகை சென்றுசென்
றறிய லாவவன் றாலணி மாமலர்
வெறியும் வேரியும் விம்மி விரிந்துதேன்
செறியுந் தொங்கற்செம் பொன்முடி மன்னனே.