| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 146 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 646. |
அஞ்சி நின்றவர் கூறிய பின்னரி மஞ்சு வென்பவன் சொல்லுமற் றாங்கவன் செஞ்சே வேபகை யாமெனிற் றேர்ந்துகண் டெஞ்சி றொல்புக ழாய்பின்னை யெண்ணுவாம். |
| 647. |
பகைய லாதவ ரைப்பகை யாக்கலும் நகையி றீமனத் தாரைநண் பென்னலும் முகையின் வேய்ந்ததொர் மொய்ம்மலர்க் கண்ணியாய் மிகையின் மற்றவை பின்னை வெதுப்புமே. |
| 648. |
அறியத் தேறுந் திறத்ததெவ் வாறெனிற் றிறையிற் கென்று விடுதும்விட் டாற்றிறை முறையிற் றந்து முகமன் மொழிந்தெதிர் குறையிற் கொற்றவ குற்றமங் கில்லையே. |
| 649. |
என்ற லும்மிது நன்றென வேந்தொளி நின்ற நீண்முடி நீடிணர்க் கண்ணியான் சென்று |