| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 147 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| தூதுவர் தாந்திறை கொள்கென வென்றி வேலவன் மேல்விடை யேயினான். | |
| 650. |
ஊட்ட ரக்குண்ட கோலரொண் கோலத்தர் ஓட்ட ரும்பொறி யொற்றிய வோலையர் நாட்டி யம்முணர் வாரொரு நால்வர்சேண் மோட்டே ழின்முகில் சூழ்நெறி முன்னினார். |
| 651. |
தீதறு தென்மலை மாதிர முன்னுபு தூதுவர் சூழ்சுடர் சூடிய சூளி்கை ஓதின ரோதி யுலப்பற வோங்கிய போதன மாநகர் புக்கன ரன்றே. |
| 652. | செஞ்சுடர் மின்னொளி சென்றுதி ளைத்திட மஞ்சொடு வைகிய மாமணி மாளிகை வெஞ்சுடர் வீதி விலக்குவ கண்டுதம் விஞ்சையர் செல்வம் வெறுத்தன ரன்றே. |
| 653. |
மூரிமு ழாவொலி விம்மி முரன்றெழு காரிமி ழார்கலி யான்மயி லாலுவ சோரிமு ழாவிழ விற்றெரு துற்றபின் சீரிமி ழாற்பொலி வெய்தினர் சென்றே. |
| 654. |
சூளிகை சூடிய சூல விலைத்தலை மாளிகை மேன்மழை மாமுகில் போழ்தலின் நீளிய நீரரு வித்திரள் வீழ்வன காளைக டாதை நகர்ப்பல கண்டார். |