சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   149
Zoom In NormalZoom Out

 ன்ற வணங்கி மொழிந்தனன் மன்னனும்
ஒன்றிய போதக வென்ப துரைத்தான்.
 
661.பொன்னவிர் நீள்கடை காவலன் போதக
வென்னலி னெய்தி யிலங்கொளி நீண்முடி
மன்னவன் வார்கழல் வாழ்த்தி மடக்கிய
சொன்னவி லோலைகை தொழுதனரீந்தார்.
 
662.வாசகன் மற்றது வாசினை செய்தபின்
மாசக னீண்முடி மன்னவன் முன்னிவை
தேசக மூசிய வாழியி னான்தமர்
ஓசைக ளோலைகொ டொப்ப வுரைத்தார்.
 
663. ஊடக மோடி யெரிந்தொளி முந்துறும்
ஆடக மாயிர கோடியு மல்லது
சூடக முன்கையர் தோடக மெல்லடி
நாடக ராயிர நாரியர் தம்மையும்.
 
664.தெண்டிரை சிந்திய சங்கொடு செங்கதிர்
எண்டர ளம்பவ ழக்கொடி யீட்டமும்
கண்டிரண் முத்தொடு காழகி லந்துகில்
பண்டரு நீரன வும்பல பண்டமும்.
 
665.வெண்கதிர் முத்தகில் வேழ மருப்பொடு்
கண்கவர் சாமரை வெண்மயி ரின்கணம்
தண்கதிர் வெண்குடை யாய்தரல் வேண்டுமிஃ
தொண்சுட ராழியி னானுரை யென்றார்.
 
666.வேந்தன்மற் றதனைக் கேட்டே வேற்றுவ னெறிந்த
                                  கல்லைக்
காந்திய கந்த தாகக் கவுட்கொண்ட களிறு போலச்
சேந்தவ ருரைத்த மாற்றஞ் சி