சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   150
Zoom In NormalZoom Out

 ந்தையு ளடக்கி வைத்து
நாந்தகக் கிழவர் கோமா னயந்தெரி மனத்த னானான்.
 
667.கருத்துமாண் குலனுந் தேசுங் கல்வியும் வடிவுந் தம்முள்
பொருத்தினாற் பொருத்த லாகாப் புலமைமிக் குடைய ரேனும்
ஒருத்தனுக் கொருத்தன் கூறக்கேட் டுற்றது செய்து வாழத்
திருத்தினா னிறைவ னேகாண் செய்வினைக்கிழவ னென்பான்.
 
668. மதியினை மலரச் சூழ்ந்து வருந்தித்தாம் படைக்கப் பட்ட
நிதியினை நுகர்வ லென்று நினைத்தினி திருந்த போழ்திற்
பதியினைக் கலக்கிச் சென்று பறித்துயிர் பிறர்க்கு நீட்டும்
விதியினை விலக்க மாட்டார் மெலிபவே யெளிய நீரார்.
 
669. ஒளியினாற் பெரிய னாய வொருவனுக் குவப்பச் செய்தோர்
அளியினால் வாழ்து மென்னும் மவாவினு ளழுந்து கின்றாம்
தெளியநா மிதனைக் கண்டும் செய்வினைத் திறங்க ளோராம்
அளியமோ வளியஞ் சால வறிவினாற் பெரிய மேகாண்.
 
670. அன்றுநா முயலப் பட்ட விணைகள்மற் றனைய வானால்
இன்றுநா மவலித் தென்னை யினிச்செய்வ தெண்ணி னல்லான்
வென்றி