சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   151
Zoom In NormalZoom Out

 யான் விளங்குமாழி யவர்கட்கு மேலை வேந்தர்
ஒன்றியாங் குவப்பித் தாண்ட துரைப்பக்கேட் டுணர்ந்தா
                                          மன்றே.
 
671. என்றுதன் மனத்தி னெண்ணி யிலங்குகோற் கைய ராகி
நின்றகே சரரை நோக்கி நிலமன்ன னென்னை சொன்னான்
ஒன்றியா மிங்க ணுள்ள தொருப்படுத் துய்ப்பக் கொண்டு
சென்றுநும் மிறைவர்க் கெம்வா யின்னுரை சிதர்மி
                                       னென்றான்.
 
672.ஆளிகட் கரச னன்ன வரசர்கோ னதனைக் கூறி
வாளிவிற் றடக்கை வெம்போர் மணிவரை யனைய மார்பிற்
காளைக ளிதனைக் கேட்பிற் கனல்பவா லிவரை யின்னே
மீளுமா றமைப்ப னென்று வேண்டுவ விதியி னீந்தான்.
 
673.செய்யவாய்ப் பசும்பொ னோலைச் சீறடிப் பரவை யல்குல்
ஐயநுண் மருங்கு நோவ வடிக்கொண்ட குவவுக் கொங்கை
வெய்யவாய்த் தண்ணெ னீலம் விரிந்தென விலங்கி நீண்ட
மையவா மழைக்கட் கூந்தன் மகளிரை வருக வென்றான்.
 
674. அணிமுழா வனைய தோளா