சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   152
Zoom In NormalZoom Out

 னருளிய தறிந்த போழ்தின்
மணிமுழாச் சிலம்பக் கொண்ட மண்டப வரங்கி னங்கண்
பிணிமுழாப் பெயர்த்த பாணி பயிற்றுத லிலயங் கொண்ட
கணிமுழா மருங்குற் பாடற் கலிப்பிவை தவிர்த்துச் சென்றார்.
 
675. மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை வான்குழா மென்ன வாங்கண்
வெஞ்சுடர் விளங்கு மாடத் திடைநிலை விரவித் தோன்றி
வஞ்சிநுண் மருங்கு னோவ மணிநகைக் கலாவ மின்னச்
செஞ்சுடர்ச் சிலம்பு பாடத் தேன்றிசை பரவச் சேர்ந்தார்.
 
676.மாடெலா மெரிந்து மின்னும் வயிரக்குண் டலத்தோ டம்பொற்
றோடுலாந் துளங்கித் தோன்றுஞ் சுடிகைவாண் முகத்து
                                          நல்லார்
பாடலா னரம்பின் தெய்வப் படிவங்கொண் டனைய நீரார்
ஆடலா லரம்பை யொப்பா ராயிர ரவரை யீந்தான்.
 
677. காய்ந்தொளி பவழச் சாதிக் கடிகைகள் காண மின்னுப்
பாய்ந்தெழு சுடர்ச்சங் கீன்ற பருமணித் தரளக் கோவை
ஏந்தெழிற் காக துண்ட மருப்பிணை கவரிக் கற்றை
ஆய்ந்தெழின் மகரப் பூணா னுவப்பன வனைத்து மீந்தான்.
 
678. அஞ்சுடர் வயிரப் பூணா னருளினன் விடுப்