| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 154 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ங்கு நெற்றிமேற் பொடித்தன சிறுவியர்ப் புள்ளி யொள்ளரி அடுத்தெழு சுடரகத் துக்க நெய்த்துளி கடுத்தவாட் கண்ணுநீர்த் திவலை கான்றவே. | |
| 683. |
படத்திடைச் சுடர்மணி தீண்டப் பட்டெரி கடுத்திதுமி ழரவெனக் கனன்ற நோக்கமோ டடுத்தெரிந் தழல்நகை நக்கு நக்கிவை எடுத்துரை கொடுத்தன னிளைய காளையே. |
| 684. |
உழுதுநன் கடன்கழித் துண்டுவேந்தரை வழிமொழிந் தின்னணம் வாழு மாந்தர்போல் எழுதிய திறையிறுத் திருந்து வாழ்வதே அழகிது பெரிதுநம் மரச வாழ்க்கையே. |
| 685. |
நாளினுந் திறைநுமக் குவப்பத் தந்துநா டாளுது மன்றெனி லொழிது மேலெம தோளினுந் தொடுகழல் வலியி னானுமிவ் வாளினும் பயனெனோ ரீஇய மாந்தர்காள். |
| 686. | விடமுடை யெரிக்கொடி விலங்கு நோக்குடை அடலுடைக் கடுந்தொழி லரவி னாரழற் படமுடை மணிகொளக் கருதிப் பார்ப்பதோர் மடமுடை மனத்தனும் மயரி மன்னனே. |
| 687. | இருங்கலிப் படையினு மிகலி |