சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   156
Zoom In NormalZoom Out

 மஞ்சு வவனைக் கண்டே
ஏகிய புகழி னானைக் கண்டது மீயப் பட்ட
தோகையஞ் சாய லார்தங் குழாங்களு நெதியுஞ் சொல்லி.
 
693. மீட்டிளங் குமரன் கண்டு விடுசுட ரிலங்க நக்கு
மோட்டிளங் கண்ணி தீய முனிந்தழன் முழங்க நோக்கி
ஊட்டிலங் குருவக் கோலோர் தங்களுக் குரைத்த வெல்லாம்
தோட்டிலங் குருவத் தொங்க லமைச்சற்குச் சொல்லி
                                         யிட்டார்.
 
694.அரும்பெற லறிவின் செல்வ னரிமஞ்சு வதனைக் கேட்டே
பெரும்பகை யதனைக் கேட்பிற் பெரியவன் சிறிது நோனான்
இரும்பகை யிதனை யென்கொல் விலக்குமா றென்று தானே
சுரும்பிவர் தொடையன் மார்பன் சூட்சிகொண் மனத்
                                        தனானான்.
 
695.மின்றொடர்ந் திலங்கு பூணான் விளைவுறா விளைமை தன்
                                            னால்
நன்றுதீ தென்னுந் தேர்ச்சி நவின்றில னாத லால்யான்
ஒன்றவோர் மாயங் காட்டி வுளைவித்துக் குறுக வோட்டிக்
குன்றிடைச் சீயம் தன்மேற் கொளப்புணர்த் திடுவ
                                        னென்றான்.
 
696. அன்னண மனத்தி னாலே யழைத்தரி கேது வென்னு
மின்னணங் குருவப் பைம்பூண் விஞ்சைய னவனைக் கூ