சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   157
Zoom In NormalZoom Out

 விக்
கன்னவி றோளி னாற்குக் கருமமீ தென்று காட்டி
மன்னுமோர் மாயச் சீய மாகென வகுத்து விட்டான்.
 
697. ஒள்ளெரி நெறிப்பட் டன்ன சுரியுளை மலைகண் போழும்
வள்ளுகிர் மதர்வைத் திங்கட் குழவிவா ளெயிற்றுப் பைங்
                                             கண்
உள்ளெரி யுமிழ நோக்கி யுருமென வதிரும் பேழ்வாய்க்
கொள்ளரி யுருவு கொண்டான் கொடியவன் கடிய சூழ்வான்.
 
698.இலைத்தடஞ் சோலை வேலி யிமவந்த மடைந்து நீண்ட
சிலைத்தடந் தோளி னார்தஞ் சிந்துநா டதனைச் சேர்ந்து
மலைத்தடம் பிளந்து சிந்த மண்புடை பெயர முந்நீர்
அலைத்துடன் கலங்கி விண்பா லதிரநின் றுரறி யிட்டான்.
 
699.பொடித்தலை புலம்பிக் கானம் போழ்ந்துமா நெரிந்து வீழ
அடித்தலை கலங்கி வேழம் பிடிகளோ டலறி யாழப்
புடைத்துழிப் பதடி போலத் துறுகற்கள் புரண்டு பொங்க
இடித்தலின் மனித்த ரெல்லா மெயிறுற விறுகிச் சோர்ந்தார்.
 
700. அப்படி யவனை யவ்வா றமைத்தபி னமைச்ச னாங்கண்
மெய்ப்புடை தெரிந்து சொன்ன தூதுவ ரவரை மீட்டே
இப்படி யிவைகள்