சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   158
Zoom In NormalZoom Out

 சொல்லிப் பெயர்மினீ ரென்று வென்றிக்
கைப்படை நவின்ற வெம்போர்க் காளையைக் கனற்ற   
                                        விட்டான்.
 
701. ஆங்குத் தூதுவ ரதிர்முகி லாறுசென் றிழிந்து
பூங்கட் டேம்மொழிப் போதனக் திறைவன்றன் புதல்வர்
வீங்கு பைங்குழல் விடுசுடர் மிடைமணிப் பூணோர்
ஓங்கு தானையோ டுலாப்போந்த விடஞ்சென்றீ துரைத்தார்.
 
702. திறையின் மாற்றமுந் திறையினை விலக்கிய திறமும்
குறையென் றெங்களைக் குமரநீ பணித்ததுங் கூற
வறையும் பைங்கழ லாளியங் தடக்கையெம் மரசன்
னறையுங் குஞ்சியா னன்றுநன் றெனச்சொல்லி நக்கான்.
 
703. தளையின் விண்டுதேன் றயங்கிய தடங்கொடார் மார்ப
இளையை யென்பது மெங்கள்வாய்க் கேட்டபி னிறைவன்
ஒளியு மாற்றலுந் தன்கணொன் றுள்ளது நினையான்
அளியன் பிள்ளைதா னுரைத்தவென் றழன்றில னமர்ந்தான்.
 
704. அறியு மாயிற்ற னரும்பெற னாட்டினை யரிய
வெறி