தமிழ் இலக்கியச் சொல்லடைவுகள்
(Index for Tamil Literature)

அறிமுகம்

    சொல்லடைவு என்பது ஒரு சொல்லானது இலக்கியத்தில் எந்த இடத்தில் அதாவது செய்யுளாக இருந்தால் எந்தப் பாடலில் எந்த வரியில் வருகிறது என்றும் அல்லது உரைநடையாக இருந்தால் எந்த அத்தியாயத்தில் எந்த பத்தியில் வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதாகும்.

    இங்கு அளிக்கப்பட்டிருக்கும் தமிழ் இலக்கியச் சொல்லடைவுகள் பிரசித்திப் பெற்ற தமிழ் இலக்கியங்களிலிருந்து தொகுக்கப்பட்டதாகும். இச்சொல்லடைவுகள் மாணவர்கள், தமிழ் ஆய்வாளர்கள் சொற்களை ஆழமாகவும் ஆய்வுக்கண்ணோட்டத்தில் படித்துணரவும் உய்த்துணரவும் ஓர் அரிய கருவூலமாக விளங்குகின்றன.

    சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை நூறு இலக்கியங்களில் பயின்று வரும் சொற்களையெல்லாம் பிரித்தெடுத்து, அகரவரிசைப் படுத்தி, அவைகளின் வரன்முறையையும் அமைத்து உருவாக்கப்பட்டுள்ளன.

    சொல் ஆராய்ச்சிக்கும், பழந்தமிழ்ச் சொற்களை மீட்டுருவாக்கம் செய்வதற்கும் இச்சொல்லடைவுகள் வழி வகுக்கும். பன்முக நோக்கில் ஆய்வுச் சிந்தனையை மேம்படுத்தும் விதமாக இச்சொல்லடைவுகள் அமைந்துள்ளன.

      எ.கா:

தமிழ் இலக்கியத்தில்  
“ஆழி”
  என்ற சொல்லிற்கான சொல்லடைவு:

அகநானூறு
- 54.5, 80.9, 224.14, 229.2, . . . . .
பழமொழி நானூறு
- 394.3, . . . . .
கம்பராமாயணம்
- 106.1, 416.1, 590.4, 630.1, . . . . .
தேவாரம்
- 887.1, 1467.5, . . . . .