சில மகர ஈறு இன்சாரியை பெறுதல்
இஃது, மகரவீற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று.
(இ-ள்) இன் இடைவரும் மொழியும் உள - மகரவீறு அத்துச் சாரியை யொழிய இன்சாரியை இடைவந்து முடியும் மொழிகளும் உள.
எ - டு: உருமினை, உருமினொடு என ஒட்டுக.