இஃது, அம்ம என்பதற்கு எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. (இ-ள்) உரைப்பொருள் கிளவி நீட்டமும் வரையார்-உரையசைப் பொருண்மையினையுடைய அம்ம என்னும் இடைச்சொல் தன் ஈற்றகரம் அகரமாய் நிற்றலேயன்றி ஆகாரமாய் நீண்டு முடிதலையும் வரையார். எ - டு: அம்மாகொற்றா என வரும். "ஒன்றென முடித்தல்" (பொருள்-999 உரை) என்பதனான், அந் நீட்சி இயல்பு கணத்தும் கொள்க. அம்மாஞெள்ளா என வரும். (10)
|