2. இடையொற்று ஈறுகள்

வேற்றுமையில் ரகார ஈறு

363.ரகார இறுதி யகார இயற்றே.

இஃது, ரகாரவீற்று வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ரகார இறுதி யகார இயற்று - ரகாரவீற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் யகாரவீற்று இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்தவழி மிக்கு முடியும்.

எ - டு : தேர்க்கால்; செய்கை, தலை, புறம் என வரும்.

(67)