இதுவும், அவற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) பூல் வேல் ஆல் என் கிளவியொடு ஆ முப்பெயர்க்கும்-பூல் என்னும் சொல்லும் வேல் என்னும் சொல்லும் ஆல் என்னும் சொல்லும் ஆகிய மூன்று பெயர்க்கும், அம் இடை வரும் - வேற்றுமைக்கண் திரிபின்றி அம்முச்சாரியை இடை வந்து முடியும். எ - டு : பூலங்கோடு, வேலங்கோடு, ஆலம்கோடு; செதிள், தோல், பூ என வரும். (80)
|