5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

ஒன்று முதல் ஒன்பது எண்முன் நூறு

460.நூறுமுன் வரினுங் கூறிய இயல்பே.

இஃது , ஒன்று முதல் ஒன்பான்களோடு நூறு என்பதன் முடிபு கூறுகின்றது.

நூறு முன் வரினும் கூறிய இயல்பு - நூறு என்பது (ஒன்று முதல் ஒன்பான்கண்) முன் வரினும் (மேல் பத்தென்பதனோடு புணரும் வழி ) கூறிய இயல்பு எய்தி முடியும்.

எ - டு : ஒருநூறு, இருநூறு , அறுநூறு , எண்ணூறு என வரும். இவை மாட்டேற்றானே முடிந்தன.

(54)