மொழி மரபு

5. போலி

போலி எழுத்துக்கள்

54.அகர இகரம் ஐகாரம் ஆகும்1

இஃது, போலி எழுத்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

அகரம் இகரம் - அகரமும் இகரமும் கூட்டிச் சொல்ல, ஐகாரமாகும் - ஐகாரம்போல ஆகும்.

எ - டு: ஐயர், அஇயர்2 என வரும் . அது கொள்ளற்க.

(21)

1. அகர முதலிய மூன்று சூத்திரங்களும் சந்தியக்கரம் விதிப்பனவாகக் கொண்டு "ஆகுமென்றதனை ஆகாதென விலக்கப்படுமென்பாரை, பன்னீ ருயிரு மொழிமுதலாகும்," என்புழியும், ஆகுமென்பதனாற் பன்னீருயிரு மொழிமுதலாகாவென விலக்கப்படும் போலுமெனக் கூறி மறுக்க என்பது , தொல்காப்பியச் சூத்திரவிருத்தி.

2. வயிரம் - வைரம் என எடுத்துக் காட்டலும் ஒன்று.