7.இடையியல்

சிறப்பிலக்கணம்

ஒப்பில் போலி

278ஒப்பில் போலியும் அப்பொருட்டாகும்.
 

ஒப்புமைணர்த்தாத போலிச்சொல்லும் ஆங்க வென்பதுபோல உரையசையாம்; எ - று.

எ - டு : மங்கலமென்பதோ ரூருண்டு போலும் என வரும்.

போலும் போல்வது என்னுந் தொடக்கத்துப் பலவாய்பாடுந் தழுவுதற்குப் போலி யென்றார். ` நெருப்பழற் சேர்ந்தக்கா னெய்போல்வதூஉம்' (நாலடி - 124) என்பதுமது.

அசைநிலையும் பொருள் குறித்தல்லது நில்லாமையின் ` அப்பொருட்டாகும் ' என்றார்.

(30)