7.இடையியல்

சிறப்பிலக்கணம்

குறிப்புச் சொற்கள்

282நன்றீற்று ஏயும் அன்றீற்று ஏயும்
அந்தீற்று ஓவும் அன்னீற்று ஓவும்
அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும்.
 

நன்றீற்றேயும் அன்றீற்றேயுமாவன நன்றே அன்றே என்பன. அந்தீற்றோவும் அன்னீற்றோவுமாவன அந்தோ அன்னோ என்பன. நன்றின. தீற்றின்கண் ஏயென விரியும் , இவ் விரிவு . ஏனையவற்றிற்கு மொக்கும். நன்றீற்றே யென்பதனான், நம்மூர்ந்து வரூஉமிகர வைகாரமும் (சொல் - 163) என்புழிப்போலச் சொன்முழுவதுங் கொள்ளப்படும் . ஒழிந்தனவு மன்ன.

குறிப்பொடு கொள்ளுமென்றது, மேலது போல இவையுங் குறிப்போசையாற் பொருளுணர்த்து மென்றவாறு.

ஒருவன் ஒன்றுரைத்தவழி அதற்கு மேவாதான் நன்றே நன்றே, அன்றே யன்றே என அடிக்கலும் வரும்; அவை மேவாமைக் குறிப்பு விளக்கும் . அவனன்றேயிது செய்வான் என அடுக்காது நின்றவழி அன்றீற்றேவுக்குத் தெளிவு முதலாகிய பிறபொருளும் படும் . ஏனையிரண்டும் அடுக்கியும் அடுக்காதும் இரங்கற் குறிப்பு வெளிப்படுக்கும் . இவையுங் தத்தங் குறிப்பிற் பொருள் செய்குவன.

அன்னபிறவு மென்றதனான் , அதோ அதோ சோ , சோ ஒக்கும் ஒக்கும் என்னுந் தொடக்கத்தன கொள்க.

(34)