8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`பணை'

339பணையே பிழைத்தல் பெருப்பும் ஆகும்.
 

`பணைத்துவீழ் பகழி' எனப் பனை யென்பது பிழைத்தலாகிய குறிப்புணர்த்தும்; அதுவே யன்றி `வேய்மருள் பணைத்தோள்' (அகம்-1) எனப் பெருப்பாகிய குறிப்புமுணர்த்தும்; எ - று.

பெருமையாகிய பண்புணர்த்தாது பெருத்தலாகிய குறிப்புணர்த்துமென்பார் பெருப்பென்றார்.

(43)