8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`விறப்பு' `உறப்பு' `வெறுப்பு'

347விறப்பும் உறப்பும் வெறுப்புஞ் செறிவே.
 

`விறந்த காப்போ டுண்ணின்று வலியுறுத்தும்,' எனவும் `உறந்த விஞ்சி' எனவும் `வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்' (புறம் - 56) எனவும் , விறப்பு முதலாயின செறிவென்னுங் குறிப்புணர்த்தும் ; எ - று.

(51)