8.உரியியல்

சிறப்பிலக்கணம்

அதற்கு மேலும் இரு பொருள்

378மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே.
 

`மதவிடை' எனவும் ,`மாதர் வாண்முகமதைஇய நோக்கே' (அகம்-130)எனவும், மடனும் வலியுமேயன்றி மிகுதியும் வனப்புமாகிய குறிப்புஞ் சிறுபான்மையுணர்த்தும் என்றவாறு .மதவிடை யென்புழி மிகுதி, உள்ள மிகுதி.

(82)