9.எச்சவியல்

எச்சச் சொற்களின் வகை

எதிர்மறையெச்சம்

435எதிர்மறை யெச்ச மெதிர்மறை முடிபின.
 

மாறுகொ ளெச்ச மெனப்பட்ட ஏகார வெதிர் மறையும், ஓகார எதிர்மறையும், உம்மை யெதிர்மறையுமாகிய எதின்மறையெச்ச மூன்றும் எதிர்மறையான் முடியும்; எ - று.

எ - டு : யானே கொள்வேன், யானோ கள்வன், வரலுமுரியன் என்னும் எதிர்மறையெச்சம், முறையானே, கொள்ளேன், கள்ளேன் வாராமையு முரியன் என்னும் எதிர்மறையான் முடிந்தவாறு கண்டு கொள்க.

(39)