வழக்கிடத்து உடனிற்கற்பால வல்லனவற்றது உடனிலை போற்றுக; எ - று. உடனிற்கற்பால வல்லனவான தம்முண் மாறுபாடுடையன மாறுபா டில்லனவற்ற துடனிலைக்கண் ஆராய்ச்சியின்மையின் . உடனிலை யென்றது மாறுபாடுடையனவற்ற துடனிலையேயாம். எ - டு : இந்நாழிக்கிந்நாழி சிறிது பெரிது என உடனிற் கற்பால வல்லாச் சிறுமையும் பெருமையும் உடனின்றவாறு கண்டு கொள்க. சிறிதென்பது பெரிதெனப்பட்ட பொருளை நோக்காது பெரிதென்பதற்கு அடையாய் மிகப் பெரிதன்றென்பது பட நிற்றலான் , அமைவுடைத்தாயிற்று. அறிதலென்பது இவ்வாறு அமைவுடையன கொள்க வென்றவாறு. மாறுபாடுடையன உடனிற்றல் எழுவகை வழுவினுள் ஒன்றன்மையான் இதனைக் கிளவியாக்கத்துட்கூறாது ஈண்டுக் கூறினார். (62) |