இது, தோழியிற் கூட்டத்திற் காயதொரு சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று. மேல் ` காமக்கூட்டந் தனிமையிற் பொலிதலிற்றாமே தூதுவ ராகலும் உரித் ' தெனக் கூறிப்போந்தார். அவ்வா றன்றி மேற் சொல்லப்பட்ட இயற்கைப் புணர்ச்சியானது தோழியின் முடியுமிடத்து ஓரிடத்து உண்டு என்றவாறு. " அன்பொடு புணர்ந்த வைந்திணை" (இறையனார் களவியல்-1) என்றதனால் யாண்டும் உள்ளப் புணர்ச்சியான் வேட்கை மீதூர்ந்த வழியே தோழியின் முடியப் பெறுவது என்று கொள்க. அல்லாக்காற் பெருந்திணைப்பாற்படும். (31)
|