களவியல்

123தோழி தானே செவிலி மகளே.

இது, தோழிக்கு உரியதொரு சிறப்பு உணர்த்துதல் நுதலிற்று.

களவுக் காலத்தும் இன்றியமையாளாகத் தலைவியால் வேண்டப்பட்டாள் செவிலிமகள் என்றவாறு.

எனவே, பயின்றா ரெல்லாருந் தோழியராகார். அருமறை கிளக்கப் படுதலான் உடன் முலையுண்டு வளர்ந்த செவிலி மகளே தோழி எனப்படுவாள் என்றவாறு. அருமறை கிளத்தல் என்பதனை யீண்டு வருவிக்க.

(35)