என்-னின்.வஞ்சிக்குரிய தோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. வஞ்சிப்பாவினும் அடியினீற்றின்கன் நில்லாது நேரீற்றியற்சீர் என்றவாறு. எனவே அடிமுதற்கண் நிற்கப் பெறும் என்றவாறாம். (24)
வஞ்சித்தளை மருங்கின் என்னாது வஞ்சி மருங்கின் என வாளாது கூறினான், அது கட்டளையடிக்கல்லாமாயின் வஞ்சிப் பாவினுள் சீற் வருங்கால் ஒழுந்தபாவிற்குப் போலச் சீர் இயைந்துறுதல் மாத்திரையின்றிச் சீர்தோறும் தம்முள் வேறுபாடு தோன்றத்தூக்கப்படும். அவ்வாறு தூங்கல் ஓசைப்பட நில்லா தேமா புளிமா என்னும் இரண்டு சீரும் என்றவாறாம். (தொல், பொருள்,338,பேரா.) 2. (பாடம்) நில்லா.
|